உலகம்
பதவி விலகிய ஈரானின் துணை ஜனாதிபதி…!
ஈரான் ஜனாதிபதியாக இருந்த இப்ராஹிம் ரைசி, அஜர்பைஜானிலிருந்து கடந்த ஜூன் 19 ஆம் தேதி மலைப்பகுதியில் நிகழ்ந்த ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்ததையடுத்து ஈரானின் துணை ஜனாதிபதியாக ஜாவித் ஜாஃப்ரி தேர்வு செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து லெபனான், ஈராக் மற்றும் ஈரான் எல்லைப் பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது.இந்நிலையில் ஈரானின் துணை அதிபரான ஜாவித் ஜாஃப்ரி திடீரென ராஜினாமா செய்வதாக தனது ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் தான் முன்மொழிந்த 19 உறுப்பினர்களை கொண்ட புதிய அமைச்சரவை நியமனம் தொடர்பாக அதிருப்தி அடைந்து, ராஜினாமா செய்ததாக அரசியல் வட்டாரஙக்ள் தெரிவிக்கின்றன.