Connect with us

உள்நாட்டு செய்தி

நீர்க் கட்டணங்களில் மாற்றம்: அமைச்சரவை அங்கீகாரம்

Published

on

      

நீர்க் கட்டணங்களை குறைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த 2023ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதி நீர்க் கட்டணங்களில் திருத்தம் செய்யப்பட்டது.

இந்த கட்டணங்களில் திருத்தம் செய்வதற்கு கடந்த மாதம் 15ம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.

மேலும், கடந்த மாதம் 16ம் திகதி முதல் மின்சாரக் கட்டணங்களில் திருத்தம் செய்யப்பட்டிருந்தது.

மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்டதற்கு இணங்க நீர்க் கட்டணங்களும் குறைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வீட்டுப் பாவனைக்கான நீர்க் கட்டணம் 7 வீதத்தினால் குறைக்கப்பட உள்ளது.

அசாஙக் மருத்துவமனைகளுக்கான நீர்க்கட்டணம் 4.5 வீதத்தினாலும், பாடசாலைகள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்கள் என்பனவற்றுக்கான கட்டணம் 6.3 வீதத்தினாலும் குறைக்கப்பட உள்ளது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *