உலகம்
சிரியாவில் நிலநடுக்கம்…!
சிரியா நாட்டின் ஹமா நகரத்தில் இருந்து கிழக்கே 28 கி.மீ தொலைவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆகவும், 3.9 கி.மீ ஆழத்திலும் ஏற்பட்டதாக சிரிய தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது.சிரியாவின் பல மாகாணங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது உள்ளூர் நேரப்படி இரவு 11:56 மணியளவில் ஏற்பட்டது. முன்னதாக இந்த நிலநடுக்கத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு 3.7 ரிக்டர் அளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக பொதுமக்கள் தங்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.