உள்நாட்டு செய்தி
சிறுவர்கள் மூச்சுத்திணறல் அறிகுறிகள் அதிகரிப்பு…!
சிறுவர்கள் மத்தியில் தற்போது மூச்சுத்திணறல் அறிகுறிகள் அதிகரித்து வருவதாக வைத்திய நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.சிறுவர்களுக்கு ஏற்படும் இன்புளுவென்சா வைரஸ் காய்ச்சலினை தொடர்ந்து மூச்சுத்திணறல் அறிகுறிகள் அதிகரித்து வருகின்றன.
காய்ச்சல் இரண்டு நாட்களுக்கு மேல் நீடிக்குமாயின் உடனே அருகில் உள்ள வைத்தியரை நாடி ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன், சிறுவர்களுக்குப் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது பெற்றோரின் கடமை எனவும் வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வைரஸ் நோய்களின் அறிகுறிகளாக தலைவலி, இருமல், சளி, தும்மல், உடல்வலி ஆகியவற்றுடன் கூடிய காய்ச்சல் இருக்கும் என்றும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.