Connect with us

உள்நாட்டு செய்தி

ஹரின், மனுஷவின் கட்சி உறுப்புரிமை இரத்து…!

Published

on

அமைச்சர்களாக செயற்படும் ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் செல்லுபடியாகும் என உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்த இருவரும், கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக அரசாங்கத்தின் அமைச்சுப் பதவிகளை பெற்றனர்.  

இருவரின் முறையற்ற செயற்பாடுகளுக்கு அமைய ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் செயற்குழு, அவர்களின் கட்சி உறுப்புரிமையை ரத்துச் செய்தது. இதனை எதிர்த்து ஹரின், மனுஷ ஆகிய இருவரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதனையடுத்து, ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மற்றும் அமைச்சர் பதவிகளை இழக்கும் நிலையேற்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *