உள்நாட்டு செய்தி
தேசிய அடையாள அட்டை இல்லாத வாக்காளர்களுக்கு தற்காலிக அடையாள அட்டை…!
தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் என அடையாளம் காணப்பட்ட சுமார் ஒன்றரை இலட்சம் பேருக்கு தற்காலிக அடையாள அட்டை வழங்குவதற்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களில், தோட்ட மக்களும், LGBTIQ சமூகமும் பெரும்பாலும் அடங்குவர்.
இந்நாட்டில் பதிவு செய்யப்பட்ட ஒரு கோடியே எழுபத்தி ஒரு இலட்சம் வாக்காளர்களில் அடையாள அட்டை இல்லாத மக்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி தற்காலிக அடையாள அட்டை வழங்க அனைத்து கிராம அதிகாரிகளும் தயாராக உள்ளனர்.
தேர்தல் காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில், இது தொடர்பாக உதவி, துணை தேர்தல் ஆணையர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.