உள்நாட்டு செய்தி
தேர்தல் செலவுகள் தொடர்பான தகவல்…!
2019 ஜனாதிபதி தேர்தலுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் அச்சிடும் செலவு மூன்று மடங்கு அதிகரிக்கலாம் எதிர்பார்க்கப்படுகின்றது.
அச்சிடுவதற்கு அத்தியாவசியமான மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் அச்சிடப்படும் வாக்குச் சீட்டுகளின் எண்ணிக்கை என்பன செலவு அதிகரிப்பதற்கான காரணம் என அரச அச்சகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்காக அச்சு நடவடிக்கைகளுக்காக 800 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, வேட்பாளர்களின் எண்ணிக்கையில் ஏதேனும் அதிகரிப்பு ஏற்பட்டால் அச்சிடும் செலவு மேலும் அதிகரிக்கக்கூடும் என அரசாங்க அச்சுப்பொறியியலாளர் கங்கா கல்பானி லியனகே குறிப்பிட்டுள்ளார்.