Sports
ஒலிம்பிக் மகளிர் 100 மீற்றர் ஓட்டத்தில் ஜூலியன் ஆல்ஃப்ரெட் தங்கம்….!
ஒலிம்பிக் மகளிர் 100 மீற்றர் ஓட்டத்தில் செயின்ட் லூசியாவைச் சேர்ந்த 23 வயதான ஜூலியன் ஆல்ஃப்ரெட் தங்கப் பதக்கத்தை தனதாக்கியுள்ளார்.
பந்தய தூரத்தை 10.72 வினாடிகளில் கடந்த அவர், சர்வதேச சாதனையை தனதாக்கியுள்ளார்.இப்போட்டியில் நடப்பு உலக சம்பியனான ஷா’காரி ரிச்சர்ட்சன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
அவர் 10.87 வினாடிகள் போட்டிதூரத்தை கடந்திருந்தார்.மேலும், அமெரிக்க நாட்டவரான மெலிசா ஜெபர்சன் 10.92 வினாடிகளில் போட்டிதூரத்தை கடந்து வெண்கலப் பதக்கத்தை தனதாக்கினார்.