Connect with us

உள்நாட்டு செய்தி

தேசிய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக விஜயதாச ராஜராஜபக்ச…!

Published

on

விஜயதாச ராஜராஜபக்ச இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத் திட்டத்துடன் முன்னிறுத்துவதாக தேசிய ஜனநாயக முன்னணியின் தலைவர் ருஷான் மலிந்த தெரிவித்துள்ளார்.

அம்பாறையில் நேற்று (2) இரவு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

ஊழலை எதிர்த்தவர் அரசியலமைப்பை உருவாக்க உழைத்தவர் ஊழல் மோசடிகளை தடுக்க உழைத்தவர் ஜனாதிபதித் தேர்தலை நடாத்த பங்காற்றிய ஒருவரையே இம்முறை தேசிய ஜனநாயக முன்னணி சார்பில் முன்வைத்துள்ளோம்.

அத்துடன் இலங்கை முழுவதிலும் உள்ள மாவட்டங்களுக்கு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய பல வர்த்தகர்களை பொதுத் தேர்தலுக்கு முன்வைக்கிறோம்.

இந்த நாட்டு மக்களை ஏமாற்றிய ஊழல் அரசியல்வாதிகளை இப்போதே பதவி விலகுமாறு நாம் கேட்டுக்கொள்கிறோம்.

அப்பாவி மக்களின் உயிர்களை வீணாக பலி கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.எமது தேசிய ஜனநாயக முன்னணியின் வளர்ச்சிக்கு இந்த நாட்டை இட்டுச் செல்லும் பணிகள் உள்ளன.

நான் பொதுஜன பெரமுனவில் அங்கத்துவராக இருந்த போதிலும் நாட்டில் வலதுசாரி அரசியல் செய்யும் ரணில் விக்ரமசிங்கவுக்கு உதவவே நான் நியமிக்கப்பட்டேன்.

மேலும், பொதுத் தேர்தலுக்கு பல மாவட்டங்களில் தனது கட்சி வேட்பாளர்களை முன்னிறுத்தவுள்ளதாகவும், ஊழலுக்கு எதிரான அமைச்சர்கள் பலர் தமது கட்சியைச் சுற்றி திரளவுள்ளதாகவும் ருஷான் மலிந்த குறிப்பிட்டுள்ளார். 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *