உள்நாட்டு செய்தி
நாடளாவிய ரீதியில் தடையின்றி எரிபொருள் விநியோகம்..!
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நாடளாவிய ரீதியில் தடையின்றி எரிபொருள் விநியோகத்தை முன்னெடுக்கும் என்று,
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
சுத்திகரிப்பு நிலையங்களில் வருடாந்த பராமரிப்புப் பணி நடைபெற்று வருவதால், களஞ்சிசாலைகளிலும் கையிருப்பை பராமரிப்பதில் கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதனால், தடையில்லா எரிபொருள் விநியோகம் இடம்பெற்று வருவதாகவும் தனது சமூக வலைத்தளத்தில் அமைச்சர் குறிப்பட்டுள்ளார்.
சுத்திகரிப்பு நிலையங்களில் ஆகஸ்ட் நடுப்பகுதியில் செயல்பாடுகள் மீண்டும் தொடங்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.
ஆறு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்புக்கான திட்டம், சேமிப்புத்திறன், விநியோகத் திட்டம், கேள்விகளுக்கான விநியோகம் மற்றும் சுத்திகரிப்புச் செயல்பாடுகள் தொடர்பான முகாமைத்துவம் குறித்து,
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகளுடன் இதன் போது விரிவாக அமைச்சர் ஆராய்ந்தார்.
லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் (LIOC), China Petroleum & Chemical Corporation (Sinopec), (சினோபெக்) மற்றும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட RM Parks Inc ஆகியவற்றின் பங்குகள் மற்றும் திட்டங்களும் மதிப்பாய்வு செய்யப்பட்டதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர சமூக வலைத்தளத்தில் குறிப்பட்டுள்ளார்.