Connect with us

உள்நாட்டு செய்தி

ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த,சிறைச்சாலை அதிகாரி பணியிடை நிறுத்தம்..!

Published

on

ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரி ஒருவர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலையின் பிரதான வாயிலில் சிறைச்சாலைகள் அவசர நடவடிக்கை மற்றும் தந்திரோபாயப் படை அதிகாரிகள்,

சிறைச்சாலை அதிகாரியை சோதனையிட்ட போது அவரிடமிருந்து ஐஸ் போதைப்பொருள் பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது, சந்தேக நபர் பாதணியில் ஐஸ் போதைப்பொருளை சூட்சுமமான முறையில் மறைத்து வைத்திருந்ததாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட அதிகாரி சுமார் 20 வருடங்கள் சிறைச்சாலையில் பணியாற்றியுள்ளார்.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொரளை பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *