முக்கிய செய்தி
ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் இஸ்மாயில் ஹனியா கொலை….!
ஹமாஸ் இயக்கத்தின் பிரதானியும் அமைப்பின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவருமான இஸ்மாயில் ஹனியா ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஹமாஸின் அரசியல்துறைப் பொறுப்பாளர் ஹனியா மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் இவ்வாறு தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக ஈரானிய இராணுவம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
ஹனியா, ஈரானிய ஜனாதிபதி மசூத் பிசாக்கியானின் பதவி ஏற்பு நிகழ்வில் பங்குபற்றியதன் பின்னர், இருப்பிடம் திரும்பிய நிலையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலிய இராணுவத்தினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஹமாஸ் இயக்கம் குற்றம் சுமத்தியுள்ளது.