உள்நாட்டு செய்தி
மனித உரிமைகள் ஆணைக்குழுவால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை….!
அரசியலமைப்பில் உயர்நீதிமன்றத்தின் இறுதித்தீர்ப்பு அறிவிக்கப்படும் வரையான இடைக்காலத்துக்கு பதில் பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமிப்பதற்கு இடமளிக்கப்பட்டிருந்தாலும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகர் உள்ளிட்டோர் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி உயர்நீதிமன்றத்துக்கு எதிராகக் குழப்பம் விளைவிப்பதற்கு முற்படுவார்களேயானால் நாட்டுக்கு மிகமோசமான சேதம் ஏற்படும் என்று ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டு உரையாற்றிய பிரதமர் தினேஷ் குணவர்தன, தேசபந்து தென்னக்கோன் பொலிஸ்மா அதிபராகக் கடமையாற்றுவதற்கு இடைக்காலத்தடைவிதித்து உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு எவ்வித சட்டவலுவும் கிடையாது என்பதால் அதனை ஏற்கமுடியாது என குறிப்பிட்டார்.
மேலும், அரசியலமைப்புப் பேரவையின் அதிகாரத்தை நீதிமன்றத்தினால் சவாலுக்கு உட்படுத்தமுடியாது எனவும் தெரிவித்தார்.
அதேவேளை எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் தான் போட்டியிடவிருப்பதால் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய பதில் பொலிஸ்மா அதிபரொருவரை நியமிப்பதிலிருந்து தான் விலகியிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த வாரம் அறிவித்தார்.
அதுமாத்திரமன்றி தேசபந்து தென்னக்கோன் விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு முரணான கருத்துக்களையும் அவர் வெளியிட்டார்.
இவ்வாறானதொரு பின்னணியில் உயர்நீதிமன்ற உத்தரவைப் புறந்தள்ளும் வகையிலான இத்தகைய செயற்பாடுகள் தொடர்பில் தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் அரசியலமைப்புப் பேரவையின் தீர்மானங்களை உயர்நீதிமன்றத்தினால் சவாலுக்கு உட்படுத்தமுடியாது எனக் குறிப்பிட்டார்.