உள்நாட்டு செய்தி
மொனராகலை பொது வைத்தியசாலையில் வெடிவிபத்து
மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் நான்கு மாடி கட்டிடம் நிர்மாணிக்கப்படும் போது கொங்கிரீற்று கலவையுடன் இணைக்கப்பட்ட குழாய் ஒன்று திடீரென வெடித்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில், மூன்று தாய்மார்கள், ஐந்து குழந்தைகள் மற்றும் ஒரு குடும்ப நலப் பணியாளர் காயமடைந்துள்ளனர்.
இதன்போது, வைத்தியசாலையின் 15ஆம் வார்டின் மேற்கூரையின் மீது குழாய் உடைந்து விழுந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சம்பவம் தொடர்பில் மொனராகலை வைத்தியசாலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.