முக்கிய செய்தி
சுயேச்சையாக களமிறங்கும் ரணில்..!
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவதற்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் 2024ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நடத்தப்படும் என தேரதல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையில் இந்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
ஒகஸ்ட் 15ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்காக இன்று (26) முதல் ஒகஸ்ட் 15 ஆம் திகதிவரை கட்டுப்பணம் செலுத்தமுடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது