முக்கிய செய்தி
உறுதி செய்யப்பட்ட ஜனாதிபதி தேர்தல்…!
ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை அறிவித்து தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய 2024 ஜனாதிபதித் தேர்தல் மற்றும் அதற்கான வாக்களிப்பு/ வாக்கெடுப்பு இடம்பெறும் திகதியாக செப்டெம்பர் 21, சனிக்கிழமை என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்களை பெயர் குறித்து நியமிக்கும் வேட்புமனு தாக்கல் இடம்பெறும் திகதியாக ஓகஸ்ட் 15ஆம் திகதி வியாழக்கிழமை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இராஜகிரியவிலுள்ள தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தில் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.