உள்நாட்டு செய்தி
வாகன உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை…!
பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய குறித்த வாகனங்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் தசுன் கமகே தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழலுக்கு தீங்கை ஏற்படுத்தக்கூடிய புகையை வெளியிடும் சுமார் 93 வகையான வாகனங்கள் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக வாகன புகை பரிசோதனை நிறுவணமான வி.டி.இ தெரிவித்துள்ளது.
தீங்கு விளைவிக்கும் புகையை வெளியேற்றும் வகையில் வீதியில் வாகனங்கள் ஓடினால், 070 3500 525 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு புகைப்படம் அல்லது காணொளி அனுப்பி விவரங்களைத் தெரிவிக்குமாறு மோட்டார் போக்குவரத்துத் துறை பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
மக்களின் பங்களிப்பை உறுதி செய்வதற்காக மோட்டார் போக்குவரத்துத் துறை குறித்த வாட்ஸ்அப் தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதிக புகையை வெளியேற்றும் வாகனத்தை ஓட்டினால், இடம், நேரம், திகதி, வாகன எண் ஆகியவற்றை குறிப்பிட்டு புகைப்படம் அல்லது காணொளியை வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பவும் என தெரிவிக்கப்பட்டுளளது.