உள்நாட்டு செய்தி
1000 ரூபாவை எட்டிய மரகறிகளின் விலை!
ஒரு கிலோ பச்சை மிளகாயின் சில்லறை விலை 1000 ரூபாயை தாண்டியுள்ளது.ஒரு கிலோ எலுமிச்சம் பழத்தின் விலை ஏறக்குறைய ஆயிரம் ரூபாயை விட அதிகம் என வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். அண்மைக்காலமாக சற்றே குறைந்திருந்த மரக்கறிகள் விலைகள் மீண்டும் வெகுவாக உயர்ந்துள்ளன.ஒரு கிலோ கறி மிளகாயின் சில்லறை விலை 900 ரூபாவாகும்ஒரு கிலோ போஞ்சி ரூ.800 இற்கு விற்கப்படுகிறது.
ஒரு கிலோ உள்ளூர் உருளைக்கிழங்கின் சில்லறை விலை 560 ரூபாவாகும். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ உருளைக்கிழங்கின் சில்லறை விலை 300 ரூபாவாகும்.மேலும் ஒரு கிலோ முருங்கைக் காய் 800 முதல் 1000 ரூபாய் வரை உள்ளது. ஒரு கிலோ பீட்ரூட் 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெண்டைக்காயின் விலை ரூ.600 ஆகவும் ஒரு கிலோ தக்காளி விலை 600 ரூபாய் ஆகவும் ஒரு கிலோ கேரட்டின் விலை ரூ.480 முதல் ரூ.500 வரையும் உள்ளதுஒரு கிலோ கோவா ரூ.500 இற்கும் ஒரு கிலோ பாகற்காய் சில்லறை 450 ரூபாவுக்கும் ஒரு கிலோ புடலங்காய் ரூ.400 இற்கும் விற்கப்படும் அதேவேளை ஒரு கிலோ இஞ்சியின் சில்லறை விலை 3600 ரூபாவாக உள்ளது.