உள்நாட்டு செய்தி
பெட்ரோல் இறக்குமதியில் ஏற்பட்ட வீழ்ச்சி..!
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் இலாபமானது இவ்வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் 13.6 பில்லியன் ரூபாவாக 68.7 வீதத்தால் வெகுவாக குறைந்துள்ளது.
நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கை அமைச்சகம் வெளியிட்ட தகவலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் 2023 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 43.4 பில்லியன் ரூபா இலாபத்தை ஈட்டியுள்ளது.
புதிய போட்டியாளர்கள் சந்தைக்கு வந்தமையினால், பெட்ரோல் இறக்குமதியில் ஏற்பட்ட வீழ்ச்சியினால் இறக்குமதிச் செலவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2024ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் பெட்ரோலியம் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதிச் செலவு 648.71 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளது.
இந்த நிலைமை காரணமாக இவ்வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் விற்பனைச் செலவு 13.5 வீதத்தால் குறைந்து 337.4 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.