உள்நாட்டு செய்தி
அநுரகுமார திசாநாயக்க ஜப்பானுக்கு புறப்பட்டார்….!
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க ஜப்பான் விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.அவர் நேற்றைய தினம் (18) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் வெளிவிவகாரப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஜப்பானில் வாழ்கின்ற இலங்கையர்களுடனான சந்திப்பில் பங்கேற்பதற்காக அவர் சென்றுள்ளார்.
அதன்படி, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (21) மாலை 2 மணிக்கு ஜப்பானில் Tsukuba இல் Yatabe Citizen Hall இல் குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளதுடன், திங்கட்கிழமை (22) ஜப்பானில் உள்ள தொழில்வாண்மையாளர்களையும் சந்திக்கவுள்ளார்.அத்துடன், ஜப்பானின் உயர்மட்ட இராஜதந்திரிகள் சிலரையும் அநுர குமார திசாநாயக்க சந்திக்கவுள்ளார்.