உள்நாட்டு செய்தி
கிணற்றில் விழுந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுமி, தாயாரே கிணற்றில் வீசி கொன்றது அம்பலம்..!
ருவன்வெல்ல காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட யட்டியந்தோட்டை பிரதேசத்தில் உயிரிழந்த 4 வயது சிறுமியை,
அவரது தாயாரே கிணற்றில் வீசிக் கொலை செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
நேற்றையதினம் (17) குறித்த சிறுமி, அவர் வசிக்கும் பகுதியிலுள்ள கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
யட்டியந்தோட்டை, கிரிபோருவ தோட்டப் பகுதியைச் சேர்ந்த தேவ்மி அமயா என்ற 4 வயதும் 10 மாதங்களுமான சிறுமியே இவ்வாறு உயிரிழந்தார்.
காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது சிறுமியின் தாயாரே சிறுமியைக் கிணற்றில் வீசிக் கொலை செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த சிறுமியின் தாய் வாய் பேச முடியாத பெண் என்பதுடன், சுகவீனமுற்றிருந்த அவர் கரவனெல்ல வைத்தியசாலையில் காவல்துறை பாதுகாப்பில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
இந்நிலையில் சிறுமியின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், ருவன்வெல்ல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.