உள்நாட்டு செய்தி
ஜனாதிபதி தேர்தலுக்கான 10 பில்லியன் ரூபா நிதியை தாமதமின்றி வழங்க இணக்கம்
ஜனாதிபதி தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட 10 பில்லியன் ரூபா நிதியை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தேவைக்கேற்ப தாமதமின்றி வழங்குவதாக நிதியமைச்சின் செயலாளர் உறுதியளித்துள்ளார்.
நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் கடுமையான நிதி முகாமைத்துவத்துடன் செயற்படுவதால் குறித்த நிதியை வழங்குவதில் எவ்வித தடையும் இல்லை எனவும் தபால் சேவைகள், அச்சிடும் பணிகள் மற்றும் பாதுகாப்பிற்கான செலவுகளை வழங்க தயாராக உள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.