உள்நாட்டு செய்தி
ஜனாதிபதி தேர்தல் உரிய நேரத்தில் நடைபெற வேண்டும் -பெரமுன கட்சி-
ஜனாதிபதி தேர்தலை பிற்போடாமல் உரிய நேரத்தில் நடத்துமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்ததாக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொது செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் இன்று(16) நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ, கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட கட்சியின் பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.