உள்நாட்டு செய்தி
இன்று முதல் அமுலாகும் மின் கட்டணம் ….!
இன்று முதல் அமுலாகும் வகையில் மின் கட்டணத்தை 22.5 சதவீதத்தினால் குறைப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பான முன்மொழிவுகளை இலங்கை மின்சார சபை அண்மையில், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பியிருந்தது.
இதற்கமைய, 0 முதல் 30 வரையான மின் அலகு ஒன்றின் கட்டணம் 2 ரூபாவினாலும்,30 முதல் 60 வரையான அலகு ஒன்றின் கட்டணம் 11 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.
60 முதல் 90 வரையான அலகு ஒன்றின் கட்டணம் 12 ரூபாவினாலும்,90 முதல் 120 வரையிலான அலகு ஒன்றின் கட்டணம் 20 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளதாக,இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி, வீட்டுப் பாவனை மின் கட்டணம் 27 சதவீதத்தினாலும், மத ஸ்தலங்களுக்கான மின் கட்டணம் 30 சதவீதத்தினாலும்,
விருந்தகங்கள் மற்றும் கைத்தொழிற்துறைக்கான கட்டணம் 25 சதவீதத்தினாலும் குறைவடைகின்றது.