உள்நாட்டு செய்தி
போதைப்பொருள் பயன்படுத்திய 23 வயதுடைய இளைஞர் பலி….!

கல்கிஸ்ஸயிலுள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற விருந்தில் போதைப்பொருள் பயன்படுத்திய 23 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.
கல்கிஸ்ஸ பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் 7 நண்பர்களுடன் விருந்திற்கு வந்த அவர்,போதை மாத்திரை மற்றும் ஐஸ் போதைப்பொருள் பயன்படுத்தியமையினால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
விருந்தில் கலந்து கொண்ட 7 இளைஞர்களை தாம் எச்சரித்ததாகவும் பரிசோதனையின் போது ஆபத்தான மாத்திரை மற்றும் ஐஸ் உட்கொண்டதை இளைஞர்கள் ஒப்புக்கொண்டதாகவும் களுபோவில போதனா வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி பந்துல ஜயசிங்க தெரிவித்தார்.
குறித்த இளைஞர்கள் 20 மற்றும் 24 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், அவர்களின் பெற்றோர்களையும் அழைத்து ஆபத்து தொடர்பில் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்ததாகவும் மரண விசாரணை அதிகாரி பந்துல ஜயசிங்க தெரிவித்தார்.
களுபோவில போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ஜானக அபேசிங்க உயிரிழந்த இளைஞனின் பிரேத பரிசோதனையை மேற்கொண்டதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்