உள்நாட்டு செய்தி
மூளைக்காய்ச்சலால் கைதி ஒருவர் மரணம் கைதி ஒருவர் மரணம்….!
மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிறை கைதி ஒருவர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
வைத்தியசாலையின் மருத்துவ அதிகாரி ஹேமந்த ரணசிங்க இந்த மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளார்
அத்துடன், மூளைக்காய்ச்சலுக்கான அறிகுறிகளை வெளிப்படுத்திய மேலும் மூன்று கைதிகள் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹேமந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், நோயின் தோற்றம் மற்றும் அளவை தீர்மானிக்க விசாரணைகள் நடந்து வருகின்றன. அதேநேரம், நிலைமையை திறம்பட கட்டுப்படுத்தவும் நிர்வகிக்கவும் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.