உள்நாட்டு செய்தி
தடுப்பூசி ஒவ்வாமை காரணமாக மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி…!
மிஹிந்தலை வைத்தியசாலையினால் பாடசாலை மாணவர்கள் குழுவொன்றுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசி காரணமாக 11 பாடசாலை மாணவர்கள் சுகயீனமடைந்து அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மாணவர்கள் இன்று மிஹிந்தலை வைத்தியசாலைக்கு சளி காரணமாக சிகிச்சை பெறச் சென்ற போது,
அங்கு வழங்கப்பட்ட தடுப்பூசியொன்றின் ஒவ்வாமையினால் சுகவீனமடைந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மாணவர்கள் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் சம்பவம் தொடர்பில்,
வடமத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.