உள்நாட்டு செய்தி
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு….!
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 30,000ஐ கடந்துள்ளதாகத் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 30,057 ஆகும்.
கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.6,910 ஆகும்.
அதேநேரம் 2024 ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், மேல் மாகாணத்தில் 11,661 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நாட்டில் ஜூலை மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 1,818 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், டெங்கு நுளம்பு பெருகாத வகையில் சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்ளுமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.