உள்நாட்டு செய்தி
பொதுத் தகவல் தொழில்நுட்ப பாடத்திற்கான பெறுபேறுகள் வெளியாகின…!
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின், பொதுத் தகவல் தொழில்நுட்ப பாடத்திற்கான பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
521,072 பரீட்சார்த்திகள் குறித்த பரீட்சைக்குத் தோற்றியிருந்ததாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
பெறுபேறுகளை www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk ஆகிய பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களில் பார்வையிட முடியும்.