உள்நாட்டு செய்தி
கிளப் வசந்தவை கொலை வழக்கில் சந்தேக நபர்கள் விடுதலை….!
கிளப் வசந்தவைக் கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 3 சந்தேகநபர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.வெலிபென்ன பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து அவர்கள் நேற்று, மேல் மாகாண தெற்கு பிரிவு விசேட விசாரணைப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.அத்துடன் கைதான 3 சந்தேகநபர்களும் குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்பில்லாதவர்கள் எனக் கருதி விசாரணைகளிலிருந்து விடுவிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.