உள்நாட்டு செய்தி
பொன்சேகாவின் SJBயின் அனைத்து பொறுப்புக்களும் நீக்கப்பட்டது..!
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா அந்தக் கட்சியின் சகல பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவை பாராளுமன்றக் குழுக் கூட்டம் உள்ளிட்ட கூட்டங்களுக்கு இணைத்துக் கொள்ளாமல் இருப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தொடர்பில் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா முன்வைத்த விமர்சனங்கள் மற்றும் அவரது செயற்பாடுகளைக் கருத்திற் கொண்டு இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது