உலகம்
கரடிகளைச் சுட்டுக் கொல்ல அனுமதி!
ஜப்பானில் அண்மைக் காலமாகக் கரடிகளால் மனிதர்கள் தாக்கப்படுகின்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன.இதனால் கரடிகளை சுட்டுக் கொலை செய்வதற்கான சட்டத்தை இலகுபடுத்த அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.தற்போதுள்ள சட்டத்தின்படி, அனுமதிபெற்ற துப்பாக்கிகளை வைத்திருந்தாலும் கூட, பொலிஸாரின் அனுமதியின்றிக் கரடிகளைச் சுட முடியாது.
இந்த விதியைத் தளர்த்தி, கரடிகளால் ஆபத்து ஏற்படும் சமயத்தில் அவற்றைச் சுட்டுக் கொல்லும் வகையில் சட்ட ஏற்பாடுகளை அங்கீகரிக்க அந்நாட்டின் அடுத்த பாராளுமன்ற அமர்வில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.ஆனால் இதுவும் ஆபத்தானது என்று அந்நாட்டின் வேட்டையர்கள் தெரிவித்துள்ளனர். ஆபத்தை ஏற்படுத்தும் தூர இடைவெளிக்குள் கரடிகள் பிரவேசித்ததன் பின்னர் அவற்றைச் சுட்டுக் கொல்ல முயல்வது மிக ஆபத்தானது என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.