உள்நாட்டு செய்தி
ரயில் சேவைகள் இரத்து…!
பதவி உயர்வு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் நேற்று (09) நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளயடுத்து நேற்றிரவு அஞ்சல் ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டன.
ரயில் பருவகால சீட்டைப் பயன்படுத்தும் பயணிகள் அதனைப் பயன்படுத்தி அரச பேருந்துகளில் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, போக்குவரத்து சேவை அத்தியாவசியச் சேவையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு பணிப்புறக்கணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது சட்டவிரோதமானது எனப் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.அத்துடன் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேநேரம் இன்றைய தினம் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து சேவைகளை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.