உள்நாட்டு செய்தி
வாக்காளர் பட்டியல் விபரம் வெளியீடு…!
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு ஒரு கோடியே எழுபது இலட்சம் வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் ஜனாதிபதி தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.வாக்காளர் பட்டியல் இந்த மாதம் 1ஆம் திகதி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கையை விடவும் இந்த ஆண்டில் பத்து இலட்சம் வாக்காளர்கள் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.