உள்நாட்டு செய்தி
பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர பொலிஸில் முறைப்பாடு
நீதிமன்ற உத்தரவுக்கமைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராகக் கடமைகளைப் பொறுப்பேற்பதற்கு கொழும்பு – டார்லி வீதியில் உள்ள கட்சியின் தலைமையகத்துக்கு நேற்று தயாசிறி ஜயசேகர சென்றிருந்தார். எனினும், அவரை அங்கு நுழையவிடாமல் தடுக்கும் வகையில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தரப்பினர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தைப் பூட்டியிருந்ததுடன், அவருக்கு இடையூறும் விளைவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று மருதானை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை அளித்துள்ளார்.