உள்நாட்டு செய்தி
‘டின்’ இலக்கத்தை குறிப்பிட்டு வருமான வரியைச் செலுத்துமாறு அறிவிப்பு…!
வருமான வரி அடையாளக் குறியீட்டு எண்ணான ‘டின்’ இலக்கத்தை குறிப்பிட்டு வருமான வரியைச் செலுத்துமாறு பலருக்கு மின்னஞ்சல் மற்றும் குறுந்தகவல்கள் இறைவரித் திணைக்களத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன
.இது தொடர்பாக விளக்கமளித்துள்ள இராஜாங்க அமைச்சர், மாதாந்தம் 100,000 ரூபாவுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டாதவர்கள், இந்தத் தகவல் குறித்து அவதானம் செலுத்த தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.அதேநேரம் மாதாந்தம் 100,000 ரூபாவுக்கும் அதிகமான வருமானம் பெறுகின்றவர்கள், தங்களது வருமான வரியை உரிய கணக்கிற்குச் செலுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.