உள்நாட்டு செய்தி
தலவாக்கலை தோட்ட லயன் குடியிருப்பில் தீ ; மூன்று வீடுகள் முற்றாக நாசம்
தலவாக்கலை பெரிய மிலகுசேனை தோட்ட லயன் குடியிருப்பில் பாரிய தீ பரவல் சம்பவம் ஒன்று 4 இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.மின்னொழுங்கினன் காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
லயன் இலக்கம் ஒன்றிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது இதன் போது 3 வீடுகள் முழுமையாகவும் மேலும் சில வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளது.
கிராம மக்களின் முயற்சியினால் ஒரு சில மணிநேரங்களில் தீ முற்றாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
உடைமைகள் பெருமளவில் சேதமடைந்துள்ளதோடு உயிர் சேதங்கள் ஏதும் நிகழவில்லை.
பாதிக்கப்பட்ட மக்கள் ஆலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.