உள்நாட்டு செய்தி
வெலிஹித்த பகுதியில் லொறி கவிழ்ந்து விபத்து ; 4 பேர் பலி ; 3 பேர் காயம்
பதுளை வீதியில் வெலிஹித்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த விபத்து இன்று (5) வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
மொனராகலையில் இருந்து பயணித்த லொறி ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் நடுவே கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தின் போது லொறியில் பயணித்த நான்கு பேர் உயிரிழந்துள்ள நிலையில் மூவர் காயமடைந்துள்ளனர்.காயமடைந்தவர்கள் பதுளை பொது வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.