உள்நாட்டு செய்தி
போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது….!
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று(03) கைது செய்யப்பட்டார்.இரத்மலானையைச் சேர்ந்த 54 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.மொரட்டுவை பொலிஸ் அதிவிரைவு மோட்டார் சைக்கிள் குழுவினர் நடத்திய, சோதனை நடவடிக்கையின் போது கடத்துவதற்காகத் தயார் நிலையில் வைத்திருந்த இந்த போதைமாத்திரைகள் மீட்கப்பட்டன.இதன்போது 500 போதைப்பொருள் மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கல்கிஸை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.