உள்நாட்டு செய்தி
சுங்கம், மதுவரி மற்றும் இறைவரி பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது
இலங்கை சுங்க பணியாளர்கள் இன்றையதினம் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.சுங்கம், மதுவரி மற்றும் இறைவரி ஆகிய மூன்று திணைக்களங்களை ஒன்றிணைக்க எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இது தொடர்பாக ஜனாதிபதியுடனும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவுடனும் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர், போராட்டம் கைவிடப்பட்டதாக சுங்க தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.அத்துடன், இதன்போது நிறைவேற்ற முடியாமல் போன கடமைகளை இந்த வார இறுதிக்குள் நிறைவேற்றுவதற்கு சுங்க தொழிற்சங்கங்கள் இணங்கியுள்ளன.