உள்நாட்டு செய்தி
இலங்கை மற்றும் பூட்டானுக்கான இஸ்ரேலிய தூதுவர் ஜனாதிபதியை சந்தித்தார்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்தியா, இலங்கை மற்றும் பூட்டானுக்கான இஸ்ரேல் தூதுவர் நோர் கிலோன்(Naor Gilon) ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, இஸ்ரேல் கொன்சியூலர் தினேஷ் ரொட்ரிகோ ஆகியோர் கலந்துகொண்டனர்.