உள்நாட்டு செய்தி
இரா.சம்பந்தனின் இறுதி அஞ்சலி ஏற்பாடுகளில் மாற்றம்

மறைந்த தலைவர் இரா.சம்பந்தனின் இறுதி அஞ்சலி ஏற்பாடுகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இன்று பாராளுமன்றத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது பூதவுடல் திருகோணமலைக்குக் கொண்டு செல்லப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அவரது பூதவுடலை யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு சென்று பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.இதன்படி நாளைக் காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணிவரையில் யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா கலையரங்கத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. அதன் பின்னர் அவரது பூதவுடல் திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்டு, இறுதிக்கிரியை எதிர்வரும் 7ஆம் திகதி மாலை 5 மணிக்கு நடைபெறும் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.