உள்நாட்டு செய்தி
மருந்து விலைக்கான வர்த்தமானி வெளியீடு..!
மருந்துகளுக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வகையில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.மருந்து விலைகள் மற்றும் முன்னுரிமைக்கமைய அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிப்பதற்கான செயன்முறை தயாரிப்பு பணிகள் இதனூடாக இடம்பெறும்.
பன்முகத்தன்மை மற்றும் நியாயமான முறையில் இந்த விலை நிர்ணயத்திற்கான செயன்முறைகளை தயாரிக்கும் வகையில்,வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.