உள்நாட்டு செய்தி
போலி நாணயதாள்கள் தொடர்பில் பொலிஸாரின் அறிவிப்பு..!
போலி நாணயத்தாள்கள் அச்சிடுவது தொடர்பில் தம்புத்தேகம, கிளிநொச்சி மற்றும் எகொடஉயன ஆகிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளிலிருந்து தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போலி நாணயத்தாள்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதன் காரணமாக மேற்குறிப்பிட்ட பகுதிகளில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு சந்தேக நபர்களை கைதுசெய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனவே, போலி நாணயத்தாள்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.