உள்நாட்டு செய்தி
குடிபோதையில் ரயில் இயக்கிய சாரதி மீது முறைகேடு…!
கொழும்பில் இருந்து கண்டிக்கு இயக்கப்பட்ட புகையிரதத்தின் சாரதியின் முறைகேடு தொடர்பில் இலங்கை ரயில்வே திணைக்கள மட்டத்தில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
குறித்த ரயில் சாரதி சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.45 மணியளவில் கொழும்பில் இருந்து கண்டி நோக்கி செல்லும் புகையிரதம் பயணத்தை ஆரம்பித்த வேளை இயந்திர சாரதி அதிக போதையில் இருந்ததாகவும், அநாகரீகமாக நடந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.