Connect with us

உள்நாட்டு செய்தி

வெடிகுண்டு புரளியால் கண்டி நீதிமன்ற வளாகத்தில் பதற்றம்..!

Published

on

கண்டி நீதிமன்ற , வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு (119) செவ்வாய்க்கிழமை (02) காலை 10 மணியளவில் இந்த தொலைபேசி அழைப்பு கிடைக்கப்பெற்றதையடுத்து தகவலுக்கு அமைய,நீதிமன்ற வளாகத்தில் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி, அங்குள்ள மக்களை வெளியேற்றி விரிவான சோதனையில் ஈடுபடவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸார் உடனடியாக விசேட அதிரடிப்படையின் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினரை அழைத்து சம்பவ இடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த தொலைபேசி அழைப்பு யாரேனும் ஒருவரின் போலி தொலைபேசி அழைப்பு எனத் தெரியவந்தால்,

அளிக்கப்பட்ட தொலைபேசி எண் மூலம் விரிவான விசாரணை நடத்தப்பட்டு அவர் மீது கடுமையான சட்டம் அமுல்படுத்தப்படும் என்று பொலிஸ் அத்தியாச்சகர் தெரிவித்தார்.