உள்நாட்டு செய்தி
அத்தியாவசிய சேவைகளாக போக்குவரத்து சேவைகள் அறிவிப்பு !

பொது போக்குவரத்து சேவைகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டதுஇந்த வர்த்தமானியை ஜனாதிபதியின் செயலாளர் வெளியிட்டுள்ளார். அதன்படி, பயணிகள் அல்லது பொருட்களுக்கான பொது போக்குவரத்து சேவைகள் மற்றும் சாலைகள், பாலங்கள், மதகுகள் மற்றும் ரயில் பாதைகள் உள்ளிட்ட சாலை, ரயில் போக்குவரத்து சேவைகளுக்கான வசதிகளை வழங்குதல் மற்றும் பராமரித்தல் ஆகியவை அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.