உள்நாட்டு செய்தி
இஸ்ரேலிய பெண் மாயம்…!
இந்நாட்டிற்கு வருகை தந்திருந்த 25 வயதான இஸ்ரேலிய பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார்.தமர் அமித்தாய் என்ற பெண் கடந்த வியாழக்கிழமை (27) முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் உப்புவெளி பொலிஸாரிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந்த பொலிஸ் நிலைய அதிகாரி எம்மிடம் தெரிவித்தார்.
இந்த இஸ்ரேலிய பெண் கடந்த 22ஆம் திகதி இலங்கை வந்ததாகவும், பின்னர் திருகோணமலை பகுதிக்கு விஜயம் செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
திருகோணமலை பகுதியில் உள்ள ரொலக்ஸ் என்ற விடுதியில் அவர் முன்பதிவு செய்ததன் மூலம் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும் கடந்த 27ஆம் திகதி முதல் அவர் காணாமல் போயுள்ளதாக விடுதியின் உரிமையாளர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.இந்த முறைப்பாடு தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக உப்புவெளி பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி தெரிவித்தார்.இந்த பெண் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் 071 8591179 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.