உள்நாட்டு செய்தி
301 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கிய ஜப்பான் அரசாங்கம்…!
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்காக ஜப்பான் அரசாங்கம் மேலும் 301 மில்லியன் ரூபா வழங்கவுள்ளதாக இலங்கைக்கான ஜப்பான் தூதரகம் தெரிவித்துள்ளது
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கான நிதியை வழங்கும் உடன்படிக்கையில் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிதேகி நேற்று முன்தினம் கைச்சாத்திட்டுள்ளார்.
2002 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு ஜப்பான் அரசாங்கம் பாரிய நன்கொடைகளை வழங்கி வருவதுடன், இதுவரை வழங்கப்பட்டுள்ள மொத்தத் தொகை 45 மில்லியன் டொலருக்கும் அதிகம் என இலங்கைக்கான ஜப்பான் தூதரகம் தெரிவித்துள்ளது.
23.23 மில்லியன் சதுர மீற்றர் நிலப்பரப்பில் கண்ணிவெடி அகற்றப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.