உள்நாட்டு செய்தி
சஞ்சய மஹவத்த கைது…!
‘மகே ரட்ட’ அமைப்பின் தலைவர் சஞ்சய மஹவத்த குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய, அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி, நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபரினால் இந்த முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.